தொழிற்சாலைகளை திறப்பதற்கான வழிமுறைகளை வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 10, 2020

தொழிற்சாலைகளை திறப்பதற்கான வழிமுறைகளை வெளியீடு

ஊரடங்கிற்கு பின்னர் தொழிற்சாலைகள் திறக்கப்படும் போது, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்த வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

.இது தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 



இதனால், தொழிற்சாலைகளில் சரியாக பராமரிப்பு பணிகள் நடந்திருக்க முடியாது. இதனால், உற்பத்தி பிரிவுகள், பைப்லைன்களில் ரசாயனங்கள் படிந்திருப்பது, அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஆபத்தான ரசாயனம் மற்றும் தீப்பிடிக்ககூடிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கும் பொருந்தும்.தொழிற்சாலைகளை திறக்கும் போது முதல் வாரத்தை சோதனை காலமாக கருத வேண்டும்.


அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் உறுதி செய்யப்பட வேண்டும். தொழிற்சாலையை துவங்கிய உடனே, அதிக உற்பத்தி இலக்கை எட்ட வேண்டும் என முயற்சி செய்யக்கூடாது. 


தொழிற்சாலை வளாகங்களை 24 மணி நேரமும் தூய்மையாக வைத்து கொள்ளும் வகையில், 2 அல்லது 3 மணி நேரத்திற்கு ஒரு முறை தூய்மைபடுத்த வேண்டும். சாப்பிடும் அறை, மேஜைகளை, ஒவ்வொரு முறை பயன்படுத்தி முடிந்த பின்பு தூய்மைபடுத்த வேண்டும்


.தொழிற்சாலைகளில் அபாயத்தை குறைக்கும் வகையில், தொழிலாளர்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட கருவிகளில் கவனம் செலுத்த வேண்டும்.


அதில் வழக்கத்திற்கு மாறான சத்தம், வாசனை, காலாவதியான வயர்கள், கசிவு, புகை ஏற்படுவது கண்டறிந்தால், உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


 தேவைப்பட்டால், தொழிற்சாலையை மூட வேண்டும்.ஊழியர்களுக்கு தினமும் இரண்டு முறை உடல்வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும். அறிகுறி ஏதும் தெரிந்தால், தொழிலாளர்களை வேலை செய்ய அனுமதிக்கக்கூடாது.



 வாரத்தில் 24 மணி நேரம் செயல்படும் தொழிற்சாலைகளில், ஒவ்வொரு ஷிப்ட் முடிந்த பின்னர் ஒரு மணி நேரம் இடைவெளி விட வேண்டும். இதில், தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டிய துறைகளுக்க விலக்கு அளிக்கப்படுகிறது. 


தொழிற்சாலைகளில் நிர்வாகப்பிரிவில் பணிபுரிபவர்களில் 33 சதவீதம் பேர் பணியாற்றலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment