தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, May 10, 2020

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

நாளை மறுநாள்( மே 12) முதல்வர் இ.பி.எஸ்., அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.தலைமைச்செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் முறையில், முதல்வர் நடத்த உள்ள ஆலோசனை கூட்டத்தில், மாவட்டங்களில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுவதுடன், ஊரடங்கு நீட்டிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளார். கொரோனாவை தடுக்க அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு குழு மற்றும் சிறப்பு நிபுணர் குழுவுடனும் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். மே 17 க்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளார்.

No comments:

Post a Comment