தேர்வு நடைமுறைகள் ஒத்திவைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, May 10, 2020

தேர்வு நடைமுறைகள் ஒத்திவைப்பு

 வனப்பாதுகாவலர் தேர்வுக்கு பிந்தைய நடைமுறைகள், மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக, வனத்துறை அறிவித்துள்ளது.

வனத்துறையில், 320 வனப்பாதுகாவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான, 'ஆன்லைன்' தேர்வு, மார்ச், 8ல் நடந்தது. இதில், 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள், தேர்வுக்கு பிந்தைய சான்றிதழ் சரி பார்ப்பு, உடல் திறன் தேர்வு ஆகியவை, ஏப்., - மே மாதங்களில் நடத்தப்பட இருந்தன. கொரோனா தொற்று காரணமாக, இவை நடத்தப்படவில்லை.
 இந்நிலையில், வனப்பாதுகாவலர் தேர்வுக்கு பிந்தைய நடைமுறைகள், மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, வனத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment