கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு வார காலமாக ஜெர்மனியில் பியூட்டி பார்லர்கள், சலூன்கள் மூடப்பட்டு இருந்தன. அரசின் அனுமதியையடுத்து, தற்போது அவை திறக்கப்பட்டுள்ளன.
பார்பர்களுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. பல நாட்கள் ஊரடங்கு காரணமாக முக சவரம் செய்யாதவர்கள், முடி வெட்டிக்கொள்ளாத ஆண்கள், கூட்டம் கூட்டமாக சலூன்களுக்கு படையெடுக்கின்றனர்.
இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த ஜெர்மனி அரசு ஓர் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.சலூன்களில் முடி திருத்திக்கொள்ள முன்னரே அனுமதி பெற்றவர்களுள், முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் முடி வெட்டிக்கொள்ள ஆன்லைனில் புக் செய்ய வேண்டும்.
சலூனுக்கு சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். முடி திருத்துபவர், வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணியவேண்டும். ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தபடி தாங்களாகவே முடி வெட்டிக்கொள்ள முனைந்தவர்கள் பலர் முயற்சியில் தோற்று, விபரீதமான ஹேர் ஸ்டைல்களுடன் ஜெர்மனி வீதிகளில் உலா வருவதைக் காணமுடிகிறது
. செலிப்ரிட்டி ஹேர் ஸ்டைலிஸ்டுகள், பிரபலங்களுக்கு வீட்டுக்குச் சென்று முடி திருத்தி வருகின்றனர்.சிறு சலூன்களில் அடிக்கடி டெட்டால் போட்டு கழுவி சுத்தமாக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜன நெருக்கடி நிறைந்த தலைநகர் பெர்லினில் உள்ள சலூன்களில் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முடி வெட்டிக்கொள்ளும் வாடிக்கையாளர் தன் பெயர், முழு முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைப்பேசி எண், சலூனுக்குள் நுழைந்த தேதி, நேரம், புகைப்படம், மருத்துவ வரலாறு ஆகியவற்றைப் பதிவு செய்யவேண்டும்
. இதன்மூலம் இவர்களால் பிறருக்கு கொரோனா பரவும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது.குவியும் கூட்டம் காரணமாக முடி வெட்டிக்கொள்ள இரண்டு வாரங்களுக்கு முன்னரே ஆன்லைனில் புக் செய்யவேண்டிய கட்டாயத்துக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஜெர்மனி சான்சிலர் ஏஞ்சலா மெர்கல் உத்தரவுப் படி, இந்த நிபந்தனைகளைப் பின்பற்றாத அழகு நிலைய உரிமையாளர்களது கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது

No comments:
Post a Comment