NEET EXAM DATE ANNOUNCED - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 5, 2020

NEET EXAM DATE ANNOUNCED

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


கரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதில் மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், நீட் தேர்வு நடைபெறும் புதிய தேதி குறித்த அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

அதன்படி, மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று ஜே.இ.இ (JEE ) தேர்வு ஜுலை 18, 20, 21, 22, 23 ஆகிய தேதிகளிலும், ஜே.இ.இ அட்வான்ஸ் (JEE advance) தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்றும்  அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment