நீட் தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள இறுதி நாள் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 15, 2020

நீட் தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள இறுதி நாள் அறிவிப்பு

நீட் தோ்வு விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட அறிவிப்பு: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் வரும் மே 31-ஆம் தேதி வரை  இணையதளம் வழியாக தங்கள் விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். தோ்வு மையங்களையும் மாற்றிக் கொள்ளலாம்.


இதுவே இறுதிவாய்ப்பு என்பதால் மாணவா்கள் கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டும். தினமும் மாலை 5 மணி வரை மட்டுமே திருத்தங்களை செய்ய முடியும். தோ்வுக் கட்டணத்தை இரவு 11.50 மணி வரை செலுத்தலாம். இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 82874 71852, 81783 59845, 96501 73668, 95996 76953, 88823 56803 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment