ஸ்டேட்டஸ் நேரத்தை உயர்த்தியது வாட்ஸ் அப் நிறுவனம் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, May 19, 2020

ஸ்டேட்டஸ் நேரத்தை உயர்த்தியது வாட்ஸ் அப் நிறுவனம்

கொரோனா நேரத்தில் மக்களிடம் ஆன்லைன் பயன்பாடானது முன்பை விட அதிகரித்துள்ளது. இதில் கொரோனா குறித்த தவறான செய்திகள், அச்சுறுத்தும் கொரோனா புகைப்படங்கள் போன்றவற்றை சிலர் சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்புவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 


இதனையடுத்து அண்மையில் மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என செல்போன் நிறுவனங்களின் கூட்டமைப்பும் கேட்டுக்கொண்டது. இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் செயலியில் வீடியோ ஸ்டேட்டஸ் வைப்பதற்கான நேர அளவு குறைக்கப்பட்டது.

தொழில் நுட்ப ரீதியிலான சிக்கல்களை சமாளிப்பதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் ஸ்டேட்டஸ் வீடியோ கால அளவை குறைத்ததாக தெரிவித்தது. ஸ்டேட்டஸ் வீடியோ கால அளவு 30 வினாடி வரை வைக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அது 15 வினாடிகளாக குறைக்கப்பட்டது. 


வாட்ஸ்அப் சர்வர் தங்குதடையின்றி இயங்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த ஸ்டேட்டஸ் நேர அளவு குறைப்பிற்கு பயனாளர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்தனர். 

இந்நிலையில் ஸ்டேட்டஸ் வீடியோ கால அளவை 15 விநாடிகளில் இருந்து 30 விநாடிகளாக மீண்டும் வாட்ஸ் அப் நிறுவனம் உயர்த்தியுள்ளது. வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்தால் இந்த புதிய நேர அளவை பயன்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment