கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க இதையெல்லாம் செய்யுங்கள்:பொது சுகாதாரத் துறை அறிவுரை - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, May 19, 2020

கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க இதையெல்லாம் செய்யுங்கள்:பொது சுகாதாரத் துறை அறிவுரை

புகை பிடித்தால் கொரோனா வைரஸ் தீவிரமாகும். அலுவலகம் செல்வோர் மூச்சு பயிற்சி செய்வது அவசியம்,'' என, பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர், குழந்தைசாமி கூறினார்.

கொரோனா பரவல் தடுக்க அமல்படுத்தப்பட்ட, நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.அரசு அனுமதியை அடுத்து, இரண்டு நாட்களாக, 50 சதவீத பணியாளர்களுடன், அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அதேபோல, ஐ.டி., நிறுவனங்கள் உட்பட, பல நிறுவனங்களும் செயல்பட துவங்கியுள்ளன.


இந்நிலையில், பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர், குழந்தைசாமி கூறியதாவது:

 அலுவலகம் செல்வோர், வீட்டில் குறைந்தது, 40 முகக் கவசங்களையாவது வைத்திருக்க வேண்டும். மறுபயன்பாட்டுடன் கூடிய, முகக் கவசம் வைத்திருந்தால், சுடு தண்ணீர், டெட்டால் போன்ற வற்றை பயன்படுத்தி, துவைக்க வேண்டும். அவ்வாறு துவைத்த முகக் கவசத்தை, நிழலில் காய வைக்க வேண்டும்.


வெயிலில் காய வைத்தால், ஒரு நாளுக்கு பின், முகக் கவசத்தை பயன்படுத்தலாம். வீட்டிலிருந்தாலும், அலுவலகத்தில் இருந்தாலும், குறைந்தது, 15 முதல், 20 முறை கை கழுவுவது அவசியம். 

காய்ச்சல் இருப்பவர்கள் அலுவலகம் மற்றும் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியே சென்று வருபவர்கள், வீட்டிற்கு வரும் போது, கை, கால், முகங்களை கழுவ வேண்டும். பின், குளித்து விட்டு, பயன்படுத்திய துணிகளை தனியாக வைத்து துவைக்க வேண்டும்.வீட்டில் முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு உள்ளானவர்கள் இருந்தால், அவர்களுடன் நெருக்கம் காட்டுவதை தவிர்க்க வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த, ஆரஞ்சு, நெல்லிக்கனி, கீரைகள், முட்டை, பால் ஆகியவற்றை சாப்பிடலாம். மேலும், கப சுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கஷாயம் குடிக்கலாம். அரசு பரிந்துரை செய்துள்ள, விட்டமின் சி, ஜிங்க் மாத்திரையை எடுத்து கொள்ளலாம்.


தற்போதைய சூழலில், புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பவர்களுக்கு, கொரோனா தொற்று எளிதில் பரவி, உயிரிழப்பை ஏற்படுத்தலாம். 

எனவே, புகை பிடிப்பதை தவிர்த்து, அலுலவலகம் செல்வோர் தினமும் மூச்சு பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சலுான் கடைகளுக்கு செல்வோர், தங்களுக்கு தேவையான சீப்பு, டவல் போன்றவற்றை எடுத்து செல்வதன் வாயிலாக, மற்றவர்களிடமிருந்து, தங்களுக்கு கொரோனா பரவுவதை தவிர்க்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment