போலீசாருக்கு 5 ஆயிரம் முகக் கவசங்கள் வழங்கிய மாணவர்கள்: கமிஷனர் பாராட்டு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, May 19, 2020

போலீசாருக்கு 5 ஆயிரம் முகக் கவசங்கள் வழங்கிய மாணவர்கள்: கமிஷனர் பாராட்டு

திருப்பூர் போலீசாருக்கு, 5 ஆயிரம் முக கவசம் வழங்கிய மாணவர்களை, போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் பாராட்டினார்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் டாக்டர்கள், சுகாதாரத்துறை, துாய்மை பணியாளர்கள், போலீசார் உட்பட பலர் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாநகர போலீசாருக்கு பல்வேறு தன்னார்வ அமைப்பு உள்ளிட்டோர் பலர் உதவி செய்து வருகின்றனர்.அவ்வகையில், ஸ்டேன்ஸ் ஐ.சி.எஸ்.இ., மற்றும் சி.எஸ்., அகாடமி பள்ளியை சேர்ந்த பத்து மாணவர்கள் ஒன்றிணைந்து, குடும்பத்தினர், நண்பர்கள் உதவியுடன், திருப்பூர் மாநகர போலீசார் என அச்சிடப்பட்ட, 5 ஆயிரம் முக கவசங்களை, போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமாரிடம் வழங்கினர். மாணவர்களின் செயலை கமிஷனர் பெரிதும் பாராட்டினார்.

No comments:

Post a Comment