கல்வி உதவித்தொகை: கல்லூரி கல்வித்துறை அறிவுரை - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, May 19, 2020

கல்வி உதவித்தொகை: கல்லூரி கல்வித்துறை அறிவுரை

 கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக, கல்லுாரிகளில் படிக்கும் ஆதி திராவிட மாணவர்கள் பட்டியலை சேகரிக்குமாறு, கல்லுாரி கல்வித் துறை அறிவித்துள்ளது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, கல்லுாரி கல்விக்கான உதவித் தொகை, தமிழக ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் வழங்கப்படுகிறது.


 வரும் கல்வி ஆண்டில், இந்த தொகையை பெறுவதற்கான மாணவர்களின் பட்டியலை, உடனடியாக சேகரிக்குமாறு, கல்லுாரி கல்வி துறையிடம், ஆதி திராவிடர் நலத்துறை கேட்டு கொண்டு உள்ளது. இதுகுறித்து, கல்லுாரி கல்வி இயக்குனர் ஜோதி வெங்கடேசன் சார்பில், அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

அதில், 'தற்போது படித்து வரும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் விபரங்களை சேகரித்து, உரிய ஆவணங்களுடன், கல்லுாரி கல்வி துறைக்கும், ஆதி திராவிடர் நலத்துறைக்கும் அனுப்ப வேண்டும்' என, தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment