ஊரடங்கு:ஏழை மாணவர்களின் குடும்பத்திற்கு உதவிய பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 2, 2020

ஊரடங்கு:ஏழை மாணவர்களின் குடும்பத்திற்கு உதவிய பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள்!

ஊரடங்கு காரணமாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளின் குடும்பத்திற்கு உதவியுள்ளனர்.


பெரம்பூர் எம்.எச் சாலையில் உள்ள மார்கெட் தெருவில் உள்ள மற்றொரு மாநகராட்சி பெண்கள் பள்ளி ஆசிரியர்கள், தங்களிடம் படிக்கும் ஏழை குழந்தைகளின் பெற்றோர்கள் 150 பேருக்கு அவர்களது வங்கி கணக்கில் தலா ஆயிரம் ரூபாய் என ஒன்றரை லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளனர்.

அதே போன்று பெரம்பூர் எம்.எச்., சாலையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் மாணவிகளில், பெற்றோரை இழந்த மாணவிகள், உறவினர்களால் வளர்க்கப்படும் 

மாணவிகள் மற்றும் வறுமையில் வாட கூடிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் என 200 பேரை அடையாளம் கண்டு அவர்களுக்கு தலா 500 ரூபாய் மதிப்புள்ள அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்


கொரோனோ பேரிடர் காலத்தில் மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர்களின் செயல் மற்ற ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment