இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிப்பு: தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 8, 2020

இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிப்பு: தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பரசு மற்றும் பொதுச் செயலாளர் செல்வம் அறிaவித்துள்ளனர்.  இது குறித்து வெளியிட்ட அறிக்கை:

  அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 58 என்பதிலிருந்து 59 என உயர்த்தி முதல்வர் அறிவித்துள்ளார். மக்கள் நலனில் அக்கறைக் கொண்டுள்ள எந்தவொரு அரசு ஊழியர் ஆசிரியர்- அமைப்பும் குறிப்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தமிழக அரசிடம் ஓய்வுபெறும் வயதை உயர்த்தச் சொல்லி கோரிக்கை வைக்கவில்லை


. இந்த நடவடிக்கையானது பதவி உயர்வினை எதிர்நோக்கி காத்திருக்கும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓராண்டு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


தற்போது ஓய்வுபெறும் வயதினை 59 என உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது, காலிப் பணியிடங்களை மொத்தமாக தனியார்வசம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எண்ண வேண்டியுள்ளது. 

மேலும் இளைஞர்களின் வேலைவாய்ப்பினை காத்திடும் வகையிலும் அரசு ஊழியர் ஆசிரியர் பதவி உயர்வினை பாதுகாக்கும் வகையிலும், அரசு ஊழியர் ஆசிரியர் ஓய்வுபெறும் வயதினை 59 என உயர்த்தி வெளியிடப்பட்ட அரசாணையை உடனடியாக ரத்து செய்து  அறிவிப்பு வெளியிட வேண்டும்.



ஜாக்டோ-ஜியோ கண்டனம்

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதற்கு ஜாக்டோ-ஜியோ கண்டனம் தெரிவித்துள்ளது. பதவி உயர்வை எதிர்நோக்கி காத்திருக்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மேலும் ஓராண்டுக்கு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

. வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் லட்சக் கணக்கான இளைஞர்களின் அரசு வேலையை முடக்கும் செயல். எனவே இம் முடிவை திரும்பப்பெற வேண்டும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

1,000 அரசு அலுவலகங்கள் முன்பு 11ம் தேதி ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தி அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 1,000 அரசு அலுவலங்கள் முன்பு 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. 



தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில ஒருங்கிணைபாளர்கள் என்.ஜனார்த்தனன், எஸ். தமிழ்செல்வி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இதை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment