அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 3, 2020

அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்

அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில், திங்கள்கிழமை (மே 4) தொடங்கி மே 28-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனுக்கு அருகில் வான்வெளியில் மேஷம் என்னும் நட்சத்திர மண்டலப் பகுதிகள் வருவதையே வெப்பம் மிகுந்த காலமாக உணா்கிறோம்

. இந்த காலகட்டத்தை அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனக் கூறுகிறோம். ஆண்டுதோறும் 21 நாள்கள் முதல் 28 நாள்கள் வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும்.



 இந்த அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது முதல் 7 நாள்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். 21-ஆவது நாளில் வெயில் உச்சத்தைத் தொடும். அதன்பிறகு படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் குறையத் தொடங்கும்.


நிகழாண்டில் அக்னி நட்சத்திரம் திங்கள்கிழமை (மே 4) தொடங்கி மே 28-ஆம் தேதி வரை மொத்தம் 25 நாள்கள் நீடிக்கும். கத்திரி வெயிலின் போது, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அனல் காற்று வீசவும் வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment