பணி நியமனத்தில் குழப்பம் முதுநிலை டாக்டர்கள் எதிர்ப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 16, 2020

பணி நியமனத்தில் குழப்பம் முதுநிலை டாக்டர்கள் எதிர்ப்பு

தேர்வு முடியாத நிலையில், முதுநிலை மருத்துவ மாணவர்களை, மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பணியமர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு, டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.


தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், முதுநிலை படிப்பை முடிக்கும் அரசு டாக்டர்கள், தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும்.

 கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில், அரசு மருத்துவ கல்லுாரியில் முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு, தேர்வு முடியாத நிலையில், மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில், பணியமர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு, முதுநிலை மருத்துவ மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.


இது குறித்து, முதுநிலை மருத்துவ மாணவர்கள் கூறியதாவது: முதுநிலை மருத்துவ மாணவர்கள், 1,200 பேர் உள்ளனர். அனைவருக்கும், இம்மாதத்துடன், முதுநிலை மருத்துவ படிப்பு முடிகிறது


. தேர்வு கூட முடியாத நிலையில், பணியமர்த்தும் உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. வழக்கமாக எங்களுக்கு கவுன்சிலிங் நடத்தி, சீனியாரிட்டி மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி வழங்கப்படும். முறைகேடுதற்போது, நேரடியாகவே, அரசு கூறும் இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.


இதனால், நியமனத்தில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலில், அரசு பணியமர்த்தும் கிராமங்களுக்கு சென்றால், அங்கு நாங்கள் தங்குவதற்கான வீடு வாடகைக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 


தற்பாது பணி வழங்கப்பட்டாலும், மீண்டும் தேர்வு எழுத, அந்தந்த கல்லுாரிக்கு தான் வர வேண்டும். அப்போது, எங்களுக்கு விடுதியும் அளிக்கப் படாது. 

அப்போதும், நாங்கள் கஷ்டப்ப வேண்டியிருக்கும்.அனைத்து முதுநிலை மருத்துவர் களும், கொரோனா தடுப்பு பணியில் தான் ஈடுபட்டுள்ளோம். எனவே, தேர்வு முடிந்த பின், கவுன்சிலிங் நடத்தி, பணியமர்த்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment