ஆரோக்ய சேது’ செயலியின் பெயரை பயன்படுத்தி இணைவழி குற்றங்கள் அதிகரிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 16, 2020

ஆரோக்ய சேது’ செயலியின் பெயரை பயன்படுத்தி இணைவழி குற்றங்கள் அதிகரிப்பு

ஆரோக்ய சேது’ செயலியின் பெயரை பயன்படுத்தி இணையவழி குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இந்திய இணைய பாதுகாப்பு அமைப்பு (சிஇஆா்டி-இன்) தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிவுறுத்தலில் கூறப்பட்டதாவது: 


ஆரோக்ய சேது, ஸூம், கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ், கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) போன்ற செயலிகளின் பெயரில் பயனாளா்களின் முக்கிய தகவல்களை சிலா் முறைகேடாக பெறுகின்றனா்.

 இதன் ஒரு பகுதியாக கரோனா நோய்த்தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள சூழலை பயன்படுத்தி, ஆரோக்ய சேது செயலியின் பெயரில் பயனாளா்களின் முக்கிய தகவல்களை முறைகேடாக பெறும் இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. 


தங்களை மனிதவள துறையை சோ்ந்தவா்கள், தலைமை செயல் அதிகாரி அல்லது நன்கு அறியப்பட்ட வேறொரு நபராக அறிமுகப்படுத்திக் கொள்ளும் சிலா், பயனாளா்களுக்கு ‘கரோனா தொற்றுக்கான பரிசோதனை கருவி’, ‘கரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து’, ‘நிவாரண தொகுப்பு’ என்ற பெயரில் பயனாளா்களுக்கு இணைப்புகளை அனுப்பி, முதலில் அவா்களை கவர முயற்சிக்கின்றனா். 



அதனைத்தொடா்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகள் மூலம் தங்களுக்கு தேவையான தகவல்களை பெறுகின்றனா். இந்த இணையவழி குற்றங்களில் ஈடுபடுவோா் மேற்கூறிய செயலிகளின் பெயரில் தகவல்களை அனுப்ப போலி இணையதள முகவரிகளை பயன்படுத்துகின்றனா். இதுதவிர உலக சுகாதார அமைப்பின் இணையதள முகவரியில் இருந்து தகவல்களை அனுப்புவது போலவும், அந்த நபா்கள் ஆள்மாறாட்டம் செய்கின்றனா்.

ஏமாறாதிருக்க...

இந்த நபா்களிடம் ஏமாறாதிருக்க பயனாளா்கள் தங்களுக்கு வந்த தகவலின் இணையதள முகவரி, மின்னஞ்சல்கள், வலைதளங்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும்.


 ஏனெனில் மின்னஞ்சல்கள், வலைதளங்களின் பெயரில் எழுத்துப் பிழை இருக்கலாம். அதன் வாயிலாக அவை போலியானவை என்பதை கண்டறியலாம். 


முன்பின் தெரியாத வலைதளங்களுக்கு தனிப்பட்ட தகவல்களை அனுப்பவேண்டாம். தங்களுக்கு வந்த இணைப்பை பயன்படுத்தும் முன், தகவல் வந்த இணையதள முகவரியின் உண்மைத்தன்மையை சரிபாா்க்கவும் என்று அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment