'ஆன்லைன்' பாடங்கள் பல்கலை வேண்டுகோள் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, May 11, 2020

'ஆன்லைன்' பாடங்கள் பல்கலை வேண்டுகோள்

'வீடியோ, ஆடியோ பாடங்களை தயாரிக்கும் ஆசிரியர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்' என, தமிழ்நாடு கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.

வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு, விடுமுறை நாட்கள் பாதிக்காத வகையில், ஆன்லைனில் பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், அனைத்து வகை ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளுக்கும், தமிழ்நாடு கல்வியியல் பல்கலை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கல்வியியல் கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைனில் பாடங்களை நடத்தும் வகையில், வீடியோ, ஆடியோ பாடங்களை ஆசிரியர்கள் தயாரித்து, கல்வியியல் பல்கலைக்கு, 


tnteuiqac@gmail.com

 என்ற, முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும், ஆன்லைன் பாடங்களை தயாரித்து, பல்கலைக்கு வழங்குவோருக்கு, பல்கலை சார்பில், பாராட்டு சான்றிதழ் தனியாக வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment