அறிவியல் விழிப்புணர்வு வீடியோ போட்டி; பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, May 11, 2020

அறிவியல் விழிப்புணர்வு வீடியோ போட்டி; பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு

விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தின் சார்பில், மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு வீடியோ போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது.தற்போது, மீண்டும் மாணவர்களின் அறிவியல் படைப்புகளை வெளிப்படுத்த, வாய்ப்பு வழங்கியுள்ளனர். அறிவியல் கருத்துகளோடு படைப்பை, வீடியோ பதிவாக ஆடியோ விளக்கக்காட்சியோடு இருக்க வேண்டும்


.சிறந்த படைப்புகளுக்கு இ~சான்றிதழ்கள், பரிசுகள், மற்றும் அறிவியல் நிபுணர்களால் சிறப்பு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.மேலும், மூன்று முதல் ஐந்து நிமிட கால இடைவெளியில் அறிவியல் அடிப்படையிலான எளிய பரிசோதனை மற்றும் செயல்முறை விளக்க வீடியோவை உருவாக்க வேண்டும்.சோதனை அல்லது செயல்முறை, மாணவரால் நிகழ்த்தப்பட வேண்டும். வீட்டில் கிடைக்கும் சாதாரண பொருட்களைக்கொண்டு பரிசோதனை செய்யப்பட வேண்டும்.சோதனைகள், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் மற்றும் இடைநிலை என வகைப்படுத்தப்படும்.


 கருத்தின் அசல் தன்மை மற்றும் பொருத்தம், கருத்தின் விஞ்ஞான புரிதல், சிக்கலான யோசனைகள் மற்றும் கருத்துகளின் விளக்கத்தில் தெளிவு மற்றும் எளிமை, தலைப்பின் விளக்கக்காட்சி மற்றும் கோர்வை படுத்தப்பட்டுள்ள முறை உள்ளிட்ட அடிப்படையில் வீடியோ மதிப்பீடு செய்யப்படுகிறது.

இந்த போட்டியில் 6 முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம். வீடியோக்களை பதிவு செய்வது குறித்து, vvm.org.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.வீடியோக்களை மே 17ம் தேதி வரை அனுப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்கள் பெற, விஞ்ஞான் மந்தன் மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், 8778201926 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment