பணமின்றி சேமிப்பு கணக்கு துவக்கலாம்: அஞ்சல் துறை ஏற்பாடு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, May 11, 2020

பணமின்றி சேமிப்பு கணக்கு துவக்கலாம்: அஞ்சல் துறை ஏற்பாடு

ஊரடங்கு காலத்திலும், இந்திய அஞ்சல்துறை பல்வேறு சேவைகள் செய்து வருகிறது.


அதன்படி, மத்திய ~ மாநில அரசுகளின் மானிய தொகை பெற, வங்கிகள், அஞ்சலகங்களில், சேமிப்பு கணக்கு துவக்காதவர்களுக்கு, 'இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கி'யின் சேமிப்பு கணக்கு துவக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த கணக்கு துவக்க உள்ளவர்கள், ஆதார், தொலைபேசி எண் விபரங்களை, தபால்காரரிடம் தெரிவித்தால் போதும். பணம் ஏதும் செலுத்தாமல், கணக்கு துவக்கலாம். இந்த வசதியை பெற, அந்தந்த பகுதி அஞ்சலகங்களை, மக்கள் அணுகலாம்.இதன் ஒரு பகுதியாக, தமிழக அரசு உத்தரவுப்படி, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கி கணக்கு துவக்கும் பணி நடந்து வருகிறது.

 அதில், ஊரடங்கு காலத்திற்கான உதவி தொகை வரவு வைக்கப்படுகிறது.எனவே, அஞ்சல் துறையின் இச்சேவையை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என, தமிழக வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவர், செல்வகுமார் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment