ஓய்வு பெறும் வயது அதிகரிப்பதால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 7, 2020

ஓய்வு பெறும் வயது அதிகரிப்பதால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன?



தமிழகத்தில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அலுவலர்கள் நிரந்தரப் பணி இடத்தில் இருப்பவர்களுக்கு ஓராண்டு ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக நீட்டித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்

. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் இந்த அறிவிப்பு
மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசாணை எண் 51 நாள் 07.05.2020 ன்படி வெளியிடப் பட்டுள்ளது. 

யார் யாருக்கு எப்போது இருந்து பொருந்தும் : நிரந்தரப் பணியிடத்தில் பணியாற்றிக் கொண்டு இருப்பவர்கள் அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் இந்த ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு பொருந்தும். 02.05.2020 முதல் பிறந்த தேதி உடையவர்கள் அனைவருக்கும் பணி நீட்டிப்பு உண்டு.



 அரசாணையில் 31.05.2020 முதல் என்று குறிப்பிடப்பட்டிருப்பது அந்த மாதத்தின் இறுதி நாளை குறிப்பிட்டு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 01.05.2020 இல் பிறந்த தேதி உடையவர்களுக்கு இந்த அரசாணை பொருந்தாது. 30.04.2020 இல் பணிநிறைவு பெற்றவர்களுக்கு இந்த அரசாணை பொருந்தாது. 


அவர்கள் பணப்பயன் பெற்றுக் கொண்டு மனநிறைவுடன் பணி நிறைவு பெறலாம். முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பினைப் பெற்றுள்ளதா? எந்த அறிவிப்பினையும் வெளியிடாத முதலமைச்சர் அவர்கள் இந்த அறிவிப்பினையாவது வெளியிட்டுள்ளார்


. வரவேற்பு பயனாளிகளின் மனநிலையை பொறுத்ததாக அமையும். 29 ஆண்டு காலம் பணியாற்றியவர்கள் இன்னும் ஓராண்டு காலம் பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்கிற போது அவர்கள் 30 ஆண்டு முடிக்கும் போது முழு ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவார்கள். 

தேர்வுநிலை, சிறப்புநிலை பெறுபவர்கள் ஓராண்டு பணி நீடிப்பதால் அந்த நிலையினை பெறும் தகுதி உடையவர்கள் ஆவார்கள். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் இன்னும் ஓராண்டு காலம் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 


இந்த அறிவிப்பு உடன் வெளி வருவதற்கான காரணம் என்ன? ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவி வருகின்ற அதிருப்திக்கு தீர்வு காணும் முயற்சியாக கூட இருக்கலாம். ஒரே சமயத்தில் இந்த ஆண்டு பணி நிறைவு பெறுபவர்களுடைய முழு ஓய்வூதிய பணப் பயன்களை அனுமதிப்பதற்கான நிதி ஆதாரம் அரசிடம் பற்றாக்குறை உள்ளது என்பதையும் மறுப்பதற்கு இயலாது



. அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவதற்குள் நிதிப்பற்றாக்குறையினை தீர்வு கண்டு விட முடியுமா? என்ற கேள்வியும் எழாமலில்லை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏப்ரல் மாதம் பணி நிறைவு பெற்றவர்கள் மனநிறைவுடன் முழு ஓய்வூதிய பயன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் விடை பெறுவதாக நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.


 வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் கொந்தளிப்பின் உச்சக் கட்டத்திற்கு செல்வதை தடுத்து நிறுத்த முடியாது. 95 லட்சம் பேர் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து வயது முதிர்வும் நிறைவு பெறுகிற வரையில் வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

 ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வு எழுத தயார் படுத்திக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கானோர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறுக்க தான் முடியுமா? 


கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களைத் தவிர தமிழகத்தில் எந்த ஆசிரியர் சங்கங்களும் ஓய்வு பெறும் வயதை எங்களுக்கு நீட்டித்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடியதாக வரலாற்றில் இடம் பெறவில்லை. 


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் இந்த நல்லெண்ண அறிவிப்புடன் வாழ்வாதார கோரிக்கைகளுக்காக போராடிய அனைத்து நிலையினரின் மீதும் சுமத்தப்பட்டுள்ள 17பி குற்றச்சாட்டுகளை ரத்து செய்து வெளியிடும் அறிவிப்புக்காக ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


 தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது வரை 58 ஆக இருந்து வருகிறது. ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 59 வயதாக அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது


. இந்த உத்தரவு அனைத்து தமிழக அரசு ஊழியர்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை உடனடியாக அமலுக்கு வரும் தமிழகஅரசு அறிவித்துள்ளது. 


எனவே இந்த மாதத்தில் ஓய்வு பெறுவோருக்கும் இந்த அரசாணை பொருந்தும் என தெரிகிறது. (30.4 - 2020 வரை ஓய்வு பெற்றவர்கள் மற்றும் 30.4.2020க்கு முன் ஓய்வு பெற்று 3 1-5 - 2020 வரை பணி நீட்டிப்பில் உள்ளவர்களுக்கு இந்த அரசாணை பொருந்தாது எனத் தெரிகிறது. 



அதாவது 2-5 - 2020க்கு பிறகு ஓய்வு பெறவுள்ளவர்களுக்கு முழுமையாக ஓராண்டு கிடைக்கும். 1-6-2020 க்கு பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு இரண்டாண்டுகள் கிடைக்கும் 


அதாவது பணி நீட்டிப்பில் 60 வயது வரை பணி புரியலாம்) அத்துடன் ப்ரோமோசன் உள்ளிட்டவை சிலருக்கு தாமதம் ஏற்படலாம். ஏனெனில் ஒருவர் ஓய்வு பெற்றால் மட்டுமே இன்னொருவர் அந்த இடத்திற்கு வரமுடியும் என்பதால்

இது ப்ரோமோசனை சிலருக்கு பாதிக்கலாம். எனினும் 58 வயதில் இருந்து 59 வயதாக ஒய்வு பெறும் வயதை அதிகரித்து இருப்பது தமிழக அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

No comments:

Post a Comment