கொரோனா பாதிப்பு எதிரொலி: 10,11,12ம் வகுப்புகளுக்கு பாடப்பகுதி குறைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 29, 2020

கொரோனா பாதிப்பு எதிரொலி: 10,11,12ம் வகுப்புகளுக்கு பாடப்பகுதி குறைப்பு

கொரோனா பாதிப்பு எதிரொலி: 10,11,12ம் வகுப்புகளுக்கு பாடப்பகுதி குறைப்பு

10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பாடப்பகுதி குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 50 சதவீதம் பாடப்பகுதிகளை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

10ம் வகுப்பில் இரண்டு புத்தகங்களை கொண்ட சமூக அறிவியல் பாடங்களுக்கு இனி ஒரே புத்தகம் என்று கூறப்படுகிறது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்கள் தவிர்த்து பிற பாடங்களுக்கு ஒரே புத்தகம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

ஏற்கனவே இந்த கல்வியாண்டு தொடங்கி 2 மாதங்கள் ஆகிவிட்டன. தொடர்ந்து பள்ளிகள் திறப்பது குறித்து குழப்பம் நீடித்து வரும் சூழலில் மாணவர்களுக்கு பாடப்புத்தக சுமையை குறைக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு நபர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது

இந்நிலையில், 10ம் வகுப்பில், இரண்டு பாட புத்தகங்கள் கொண்ட சமூக அறிவியல்,  ஒரே புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது எனவும், அதேபோன்று 11 மற்றும் 12ம் வகுப்பில் இரண்டு பாடப்புத்தங்கள் கொண்ட வணிக கணிதம் ஒரு பாடப்புத்தமாக மாற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே சமயம்  2  பாடப்புத்தகங்கள் கொண்ட கணிதம் இயற்பியல் , வேதியியல் ஆகிய பாடப் புத்தகங்களைத் தவிர்த்து 2 பாட புத்தகங்கள் கொண்ட பாடங்களுக்கான புத்தகங்கள் ஒரு புத்தகமாக  மாற்றப்பட உள்ளது.

 முதற்கட்டமாக இந்த குழு அளிக்கும் பரீசிலனையின் அடிப்படையில் தற்போது பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டாலும், கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மேலும் பாடப்பகுதிகள் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 இதனை தொடர்ந்து 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடலாம் என்பது குறித்து முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

குறிப்பாக ஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்புகள் இன்று வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

2 comments:

  1. ☹☹☹😣😣😞😖😡😡😠🤬😈😈11th grp 1??

    ReplyDelete
  2. I can read because of school holiday

    ReplyDelete