கொரோனா:தமிழக பட்டதாரி இளைஞர் உருவாக்கி பாராட்டைப் பெற்ற புதிய கருவியின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன? - Minnal Kalvi Seithi

Breaking

Monday, June 29, 2020

கொரோனா:தமிழக பட்டதாரி இளைஞர் உருவாக்கி பாராட்டைப் பெற்ற புதிய கருவியின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

கொரோனா:தமிழக பட்டதாரி இளைஞர் உருவாக்கி பாராட்டைப் பெற்ற புதிய  கருவியின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
இன்ஜி., பட்டதாரி வடிவமைத்துள்ள கொரோனா சளி மாதிரி எடுப்பதற்கான தானியங்கி ரோபோ எந்திரம் பாராட்டை பெற்றுள்ளது.நாகபட்டினத்தை சேர்ந்தவர் கார்த்திக்.

 கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை வேடப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் 'ரோபாட்டிக் புட் ட்ரே' எனும் சிறிய ரக சக்கர ரோபோவை கண்டுபிடித்தார். 

இதன் மூலம் கொரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு உதவும் வகையில், சுமார், 5 - 7 கிலோ வரையிலான பொருட்களை எடுத்து செல்ல முடியும் என, தெரிவித்தார். இந்நிலையில், தற்போது கொரோனா சளி மாதிரி எடுப்பதற்கு தானியங்கி ரோபோ இயந்திரம் ஒன்றை வடிவமைத்து உள்ளார்.

இதுகுறித்து கார்த்திக் கூறியதாவது: ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை சளி மாதிரி எடுக்க மனித ஆற்றலுக்கு மாற்றாக இந்த ரோபோடிக் எந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 மொபைல்போன் செயலி மூலம், இணையம் வாயிலாக இந்த ரோபோவை இயக்க முடியும். மேலும், தாமதமின்றி துரிதமாக இரண்டு நிமிடத்தில் பரிசோதனை செய்ய முடியும். சளி மாதிரிகள் பலருக்கு எடுக்கப்பட வேண்டும் என்பதால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.


இந்த ரோபோவை பயன்படுத்தும் போது, எந்திரம் தானியங்கி முறையில் சுத்தம் செய்து கொள்ளவும், சளி மாதரி எடுப்பவர்கள் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து கொள்ளும் வகையிலும் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. 

எந்திரத்தை 360 டிகிரி முறையில் கட்டுப்படுத்த முடியும். 'கோவிட் -19 ஸ்மார்ட் ஸ்வாப்' என பெயரிடப்பட்டுள்ளது. இது 'செமி ஆட்டோமேட்டிக்' வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழு தானியங்கி எந்திரத்தை வடிவமைக்க அரசு உதவ வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment