ஆறு மாநிலங்களில் பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்த, உலக வங்கி வழங்கிய கடன் உதவி எத்தனை கோடிகள் என தெரியுமா? 6 மாநிலங்கள் எவை? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 29, 2020

ஆறு மாநிலங்களில் பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்த, உலக வங்கி வழங்கிய கடன் உதவி எத்தனை கோடிகள் என தெரியுமா? 6 மாநிலங்கள் எவை?

ஆறு மாநிலங்களில் பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்த, உலக வங்கி வழங்கிய கடன் உதவி எத்தனை கோடிகள் என தெரியுமா?
6 மாநிலங்கள் எவை
?
இந்தியாவில், மஹாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்த, உலக வங்கி, 3,700 கோடி ரூபாய் கடன் அளித்துள்ளது.

உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில், மஹாராஷ்டிரா, ஹிமாச்சல பிரதேசம், கேரளா, மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய ஆறு மாநிலங்களில், பள்ளி கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக, 3,700 கோடி ரூபாய் கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளது

. இதன் வாயிலாக, 15 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயன் அடைவர். மேலும், ஒரு கோடிக்கும் அதிகமான ஆசிரியர்களும் இந்த திட்டத்தால் பயன் அடைவர்.கற்பித்தல், கற்றல் மற்றும் தேர்ச்சி விகிதங்களை மேம்படுத்துதல் என்ற பெயரில், இந்த திட்டம் செயல்படுத்தப்படும். 

நாட்டின் எதிர்கால வளர்ச்சியையும், சர்வதேச அளவில் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையையும் கருத்தில் வைத்து, இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களின் திறனை மேம்படுத்துவதும், எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கும் இந்த திட்டம் பெரிதும் உதவும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment