மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு தொகை இந்த காரணங்களால் தாமதம் ஏற்படுகிறது - Minnal Kalvi Seithi

Breaking

Monday, June 29, 2020

மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு தொகை இந்த காரணங்களால் தாமதம் ஏற்படுகிறது

மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு தொகை இந்த காரணங்களால் தாமதம் ஏற்படுகிறது
அரசு பள்ளி மாணவர்களுக்கு, சத்துணவுக்கான தொகை வழங்குவது குறித்து, அரசு உரிய பதிலளிக்காமல், மவுனம் காப்பதால், குழப்பம் நிலவுகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, சத்துணவு வழங்கப்படுகிறது. தற்போது, கொரோனா ஊரடங்கால், மார்ச், 16 முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

 அதனால், மாணவர்களுக்கான மதிய உணவை, உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, உணவு பொருளாகவோ, பணமாகவோ வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழக அரசு பள்ளிகளில், சத்துணவால் பயன் பெறும் மாணவர்கள் அல்லது அவர்களின் பெற்றோரின் வங்கி கணக்கு எண்ணை பெறும்படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, சமூக நலத்துறை உத்தரவிட்டது. 

இந்த உத்தரவு, தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு, வங்கி கணக்கு எண்களை பெறும் பணி நடக்கிறது. இந்நிலையில், சத்துணவுக்கான அரிசி, பருப்பு போன்றவை, ஏற்கனவே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளதால், அவற்றை மட்டும் மாணவர்களுக்கு நேரடியாக வழங்கி விட்டு, காய்கறி, சமையல் செலவை கணக்கிட்டால், மூன்று மாதங்களுக்கு, ஒரு மாணவருக்கு, 375 ரூபாய் வரை வரும். அதை, மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தலாம். அதற்கான தொகையை வழங்க வேண்டும் என, அரசுக்கு சமூக நலத்துறை அறிக்கை அளித்தது.

ஆனால், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான சத்துணவு தொகையை, மத்திய அரசும்; ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சத்துணவு தொகையை, மாநில அரசும் வழங்க வேண்டும். மத்திய அரசு, இதுவரை சத்துணவுக்கான தொகையை அனுப்பாததால், தமிழக அரசும், இந்த விஷயத்தில் பதில் அளிக்காமல், மவுனம் சாதிக்கிறது

No comments:

Post a Comment