சென்னை மக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, June 29, 2020

சென்னை மக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

சென்னை மக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்
சென்னையில் நடக்கும், மருத்துவ முகாம்களில், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்' என, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட, கொரோனா தடுப்பு மருத்துவ முகாமில், மூதாட்டி ஒருவர் தள்ளாத வயதிலும் வந்து, தன்னை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தியது, மனம் நெகிழச் செய்தது.வயது வித்தியாசமின்றி, அலட்சியமின்றி, மருத்துவ முகாம்களில், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு, வேலுமணி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment