10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.செய்தியாளர்களுக்கு தொல். திருமாவளவன் அளித்த பேட்டி:
கரோனா காலத்தில் தற்போது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தக்கூடாது என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு.
மாணவர்கள் மன உலைச்சலில் உள்ளபோது பிடிவாதமாகத் தேர்வை நடத்தவேண்டும் என்று அமைச்சர் நடந்துகொள்வது அதிர்ச்சியை அளிக்கிறது. எனவே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்துவிட்டு அனைவரும் தேர்ச்சி என அமைச்சர் அறிவிக்க வேண்டும் என்றார்

பிள்ளைகள் தேர்வை நல்ல முறையில் எழுதிவிட்டால் பிரச்சனை இல்லை ஆனால் ஏதாவது தவறு நடந்தால் அது மிகவும் பயமாக உள்ளது தயவு செய்து பெற்றோர்களின் மனநிலையை புரிந்துகொண்டு நடக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்
ReplyDelete