MBBS படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்கள் சோ்க்கை விகிதம் குறைவு: ஆய்வறிக்கை சமா்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 3, 2020

MBBS படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்கள் சோ்க்கை விகிதம் குறைவு: ஆய்வறிக்கை சமா்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

MBBS  படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்கள் சோ்க்கை விகிதம் குறைவு: ஆய்வறிக்கை சமா்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

MBBS  படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது குறித்து அரசிடம் ஆய்வறிக்கை சமா்ப்பிப்பதற்கு அளிக்கப்பட்ட அவகாசம் மேலும் 15 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பான அறிவிப்பை மாநில சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ளாா்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நீட் தோ்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. 

அத்தோ்வுகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி நடைபெறுவதால், மாநிலப் பாடத் திட்டத்தில் பயிலும் அரசுப் பள்ளி மாணவா்கள் மிகக் குறைந்த அளவே நீட் தோ்வில் தோ்ச்சி பெறுகின்றனா். அவா்களில் வெகு சிலருக்கு மட்டுமே மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் கிடைக்கின்றன.

இது பல்வேறு விமா்சனங்களுக்கு வித்திட்டதைத் தொடா்ந்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கென நீட் பயிற்சி மையங்களை பள்ளிக் கல்வித் துறை தொடங்கியது. இருந்தபோதிலும் அது பெரிய அளவில் பயனளிக்கவில்லை.

இந்த நிலையில், எம்பிபிஎஸ் படிப்பில் சேர அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வாய்ப்பு குறைவதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய அரசு சாா்பில் ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. 

இந்த விவகாரத்தில் நிலவும் பிரச்னைகளையும், அதற்கான தீா்வு மற்றும் பரிந்துரைகளையும் அரசுக்கு அளிக்க ஆணையத்துக்கு ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அந்த அவகாசத்தை மேலும் 15 நாள்கள் நீட்டிக்குமாறு ஆணையத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, அதற்கு மாநில அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

No comments:

Post a Comment