ரேஷன் கடைகளில் 122 காலிப் பணியிடங்கள்: 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 18, 2020

ரேஷன் கடைகளில் 122 காலிப் பணியிடங்கள்: 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

ரேஷன் கடைகளில்  122 காலிப் பணியிடங்கள்: 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்


நாகப்பட்டினம் மாவட்ட நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 மொத்தம் 122 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.


நிர்வாகம் : நியாய விலைக் கடை

மேலாண்மை : தமிழக அரசு

பணியிடம் : நாகப்பட்டினம்

பணி : விற்பனையாளர்

மொத்த காலிப் பணியிடம் : 122


கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பத்தைப் பெற்று அதனை பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 15.07.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்

Click here job website

No comments:

Post a Comment