13 மாவட்டங்களில் கொரோனா விஸ்வரூபம் எடுக்கும்:சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் எச்சரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Monday, June 22, 2020

13 மாவட்டங்களில் கொரோனா விஸ்வரூபம் எடுக்கும்:சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் எச்சரிக்கை

13 மாவட்டங்களில் கொரோனா விஸ்வரூபம் எடுக்கும்:சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் எச்சரிக்கை


''சென்னைக்கு அடுத்தபடியாக, 13 மாவட்டங்கள், புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு விஸ்வரூபம் எடுக்கலாம்,'' என, பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர், டாக்டர் குழந்தைசாமி எச்சரித்துள்ளார்.

சமீபத்தில் ஓய்வு பெற்ற இவர்  அளித்த பேட்டி:

பன்றிக்காய்ச்சல் எங்கெல்லாம் பரவியதோ, அங்கெல்லாம் கொரோனாவும் தாக்கும்.

அந்த அடிப்படையில், சென்னைக்கு அடுத்தபடியாக, மதுரை, திண்டுக்கல், வேலுார், கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, துாத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய, 13 மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில், விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளது.

இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதற்காரணம், மக்கள் தொகை அடர்த்தி. இந்நகரங்களில், மக்கள் நெரிசலாக வசிப்பதால், தீவிர பரவல் நிலை உண்டாகும்.அடுத்து, அதிக மக்கள் பயணிப்பது. மாவட்டத்தின் புறநகர், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும், இங்கு தினமும் அதிக மக்கள் வந்து செல்கின்றனர்.

மூன்றாவதாக, அதிக மருத்துவமனைகள் இருப்பது. அதிகப்படியான மக்கள் சிகிச்சைக்கு வரும்போது, வைரஸ் பரவல் தீவிரமடையும். எனவே, இந்த மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பும், மக்கள் ஒத்துழைப்பும் அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment