பாடப்புத்தகங்களை மாணவர்களிடம் நேரில் வழங்க நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Monday, June 22, 2020

பாடப்புத்தகங்களை மாணவர்களிடம் நேரில் வழங்க நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பாடப்புத்தகங்களை மாணவர்களிடம் நேரில் வழங்க நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


பள்ளிக்‌ கல்வித்துறை பல்வேறு வழி காட்டுதல்களை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு வழங்கியுள்ளது.

அதன்படி, அனைத்து வகுப்புகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கும்‌ வழங்குவதற்காக பாடப்புத்தகங்கள்‌ தேவையான எண்ணிக்கையில்‌ வழங்கப்படும்‌ பாடப்புத்தகங்களை அந்தந்த மாவட்‌ டக்கல்வி அலுவலக வினியோக மையங்களில்‌ பெற்று, அவற்றை மாவட்‌ டக்‌ கல்வி அலுவலர்கள்‌ வரும்‌ 22ம்‌ தேதி தொடங்கி வரும்‌ 30ம்‌ தேதிக்கு முன்‌னர்‌ அந்தந்த பள்ளிகளில்‌ சம்பந்தப்பட்ட தலைமையாசிரியரிடம்‌ ஓப்படைக்‌கவேண்டும்‌.

மாவட்டக்‌ கல்வி அலுவலர்களால்‌ ஏற்கனவே அமைக்கப்பட்‌டுள்ள வழித்தடங்களில்‌ எந்‌தெந்த தேதியில்‌ எந்தெந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்ற விவரத்தை முன்னதாகவே தலைமையாசிரியருக்கு தெரிவித்து தயார்‌ நிலையில்‌ இருக்‌கும்படி அறிவுரை வழங்க வேண்டும்‌.

மாவட்டக்‌ கல்வி அலுவலர்களால்‌ பள்ளியில்‌ வழங்கப்படும்‌ பாடப்புத்தகங்கள்‌ பள்ளிக்கு தேவையான எண்ணிக்கையில்‌ பெறப்‌பட்டுள்ளதா? என்பதை தலைமையாசிரியர்கள்‌ சரி பார்த்து கொள்ள வேண்‌ டும்‌.

குறைவாக இருந்தால்‌ அந்த தகவலை சம்பந்தப்‌பட்ட மாவட்டக்‌ கல்வி அலுவலருக்கு தெரிவித்து பள்ளி துவங்குவதற்கு முன்‌னர்‌ அவற்றைப்‌ பெற்றுக்‌ கொள்ள வேண்டும்‌. இதற்கான போக்குவரத்து செலவினங்கள்‌ பள்‌ளிக்கல்வி இயக்குனரகம்‌ மூலம்‌ அனைத்து முதன்‌மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ விரைவில்‌ வழங்‌கப்படும்‌.


மேற்காணும்‌ பொருட்களை தனிநபர்‌களை வைத்து வாகனத்தில்‌ ஏற்றுதல்‌ மற்றும்‌ இறக்குதல்‌ பணியின்‌ போது சரியான எண்ணிக்கையில்‌ வினியோகம்‌ செய்வதை கண்காணிக்க முதன்மைக்‌கல்வி அலுவலகத்தில்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலகத்தில்‌, பள்ளிகளில்‌ பணி புரியும்‌ அலுவலக பணியாளர்களை ஓவ்வொரு வாகனத்துடனும்‌ அனுப்பி வைக்க முதன்மைக்‌கல்வி அலுவலர்களும்‌ கேட்‌டக்‌ கொள்ளப்பட்டுள்ளனர்‌.

மேற்படி பணிகளை மேற்கொள்ளும்‌ போது கொரோனா நோய்த்‌ தொற்று ஏற்படாதவாறு சமூக விலகலை கடை பிடித்து, அரசின்‌ விதிகளை பின்பற்றுவதுடன்‌ பணியாளர்கள்‌ முகக்கவசம்‌ மற்றும்‌ கையுறைகள்‌ அணிந்து பணிபுரிவதை முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ கண்காணிக்க வேண்டும்‌.மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றி பாடப்புத்‌ தகங்கள்‌, நோட்டுப்புத்தகங்கள்‌, விலையில்லா இதர பொருட்கள்‌ மாணவ, மாணவிகளுக்கு வழங்‌கப்பட்டுவிட்டதை உறுதிசெய்து அதன்‌ விவரத்தை வரும்‌ ஜூலை 1ம்‌ தேதிக்‌குள்‌ பள்ளிக்கல்வி இயக்‌குனருக்கு அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்‌டும்‌ என்று முதன்மை கல்வி அலுவலர்கள்‌, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment