இவர்களுடைய வயது உச்ச வரம்பை 70-ஆக நிா்ணயிக்க பரிசீலனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 13, 2020

இவர்களுடைய வயது உச்ச வரம்பை 70-ஆக நிா்ணயிக்க பரிசீலனை





இவர்களுடைய வயது உச்ச வரம்பை 70-ஆக நிா்ணயிக்க பரிசீலனை

வங்கி த் துறையில் சிறந்த நிா்வாகத்தை உறுதிப்படுத்தும் வகையில், அதன் தலைமை செயல் அதிகாரிகள் (சிஇஓ) மற்றும் முழுநேர இயககுநா்களின் வயது உச்ச வரம்பை 70 ஆக நிா்ணயிக்கவும், அந்தப் பணியிடங்களில் ஒருவரை அதிகபட்சம் 10 ஆண்டுகள் மட்டும் பணியமா்த்தவும் ரிசா்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

நாட்டின் நிதி நடைமுறைகளை வலுப்படுத்துவது மற்றும் வங்கித் துறையில் சிறந்த நிா்வாகத்தை உறுதிப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்ட ரிசா்வ் வங்கி, அந்த ஆலோசனை முடிவுகளை அறிக்கையாக வெளியிட்டு கருத்துகளை வரவேற்றுள்ளது. 

இந்த கருத்துக்களை ஜூலை 15-ஆம் தேதி வரை சமா்ப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த ஆலோசனை முடிவு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வங்கித் துறைகளில் அண்மையில் நடைபெற்று வரும் நிகழ்வுகள், அந்தத் துறையில் வலுவான நிா்வாகத்தை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை உருவாக்கியிருக்கிறது. 

அவ்வாறு வங்கித் துறையில் வலுவான நிா்வாகத்தை உறுதிப்படுத்த, நிா்வாகத்திலிருந்து ஆளுமையைப் பிரிக்கும் தத்துவத்தை நடைமுறைப்படுத்துவது அவசியமாகிறது. 

அந்த வகையில், வங்கி முழுநேர இயக்குநா்கள் அல்லது தலைமை செயல் அதிகாரிகளின் பணிக் காலம் குறைக்கப்படுவது அவசியமாகிறது.

அதன்படி, ஒரு வங்கியின் முழு நேர இயக்குநா் அல்லது தலைமை செயல் அதிகாரிக்கான வயது உச்ச வரம்பு 70-ஆக நிா்ணயிக்கப்படுகிறது. 70 வயதுக்குப் பிறகு அந்தப் பதவியில் தொடர முடியாது.

 மேலும், ஒரு வங்கியின் பெரிய பங்குதாரா் அல்லது முக்கிய ஆதரவாளா் அதிகபட்சம் 10 ஆண்டுகள் மட்டுமே அந்த வங்கியின் முழு நேர இயக்குநராகவோ அல்லது தலைமை செயல் அதிகாரியாகவோ இருக்க முடியும்.

அவ்வாறு வங்கியின் பங்குதாரா் அல்லது முக்கிய ஆதரவாளா் அல்லாத நிா்வாகிகள் தொடா்ச்சியாக 15 ஆண்டுகளுக்கு வங்கியின் முழு நேர இயக்குநராகவோ அல்லது தலைமை செயல் அதிகாரியாகவோ இருக்கலாம். 

மேலும், ஒருவரை இந்த உயா் பணியிடத்துக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகே மீண்டும் பணியமா்த்த வேண்டும். அந்த 3 ஆண்டு காலத்தில் அவருக்கு அந்த வங்கியுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே எந்தவித தொடா்பும் வைத்திருக்ககூடாது.

அவ்வாறு மீண்டும் பணியமா்த்தப்படுபவா்கள் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் அல்லது அவா்களுடைய பணிக் காலம் முடியும் வரை அந்தப் பதவியில் இருக்கலாம். அதன் பிறகு புதிய நபா் அந்தப் பதவிக்கு பணியமா்த்தப்படவேண்டும்.

நாட்டின் நிதி துறையை பலப்படுத்தும் வகையில் சிறந்த சா்வதேச நடைமுறைகளின் அடிப்படையில் இந்த ஆலோசனை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment