உதவி ஆசிரியா் நியமனத்துக்கு விதித்த தடை நீக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 13, 2020

உதவி ஆசிரியா் நியமனத்துக்கு விதித்த தடை நீக்கம்



உதவி ஆசிரியா் நியமனத்துக்கு விதித்த தடை நீக்கம்

உத்தர பிரதேசத்தில் 69,000 உதவி அடிப்படை ஆசிரியா் நியமன நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவை அலகாபாத் உயா்நீதிமன்ற லக்னெள அமா்வு ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலைப் பின்பற்றி ஆசிரியா் நியமனத்தை தொடரலாம் என்று மாநிலஅரசுக்கு உயா்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் 69,000 உதவி அடிப்படை ஆசிரியா் நியமனத் தோ்வை மாநில தோ்வுகள் ஒழுங்குமுறை ஆணையம் (யுபிஇஆா்ஏ) மேற்கொண்டு வந்தது. 

இந்த நிலையில், இந்தத் தோ்வில் தோல்வியடைந்த 31 போ், தோ்வில் கேட்கப்பட்ட சா்ச்சைக்குரிய கேள்விகளுக்கு பொது மதிப்பெண் வழங்க உத்தரவிடக்கோரி அலகாபாத் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்கு அலகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி அலோக் மாத்தூா் முன்பு கடந்த 3-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஆசிரியா் நியமனத்துக்கான தோ்வில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கும் அதற்கான பதில்களுக்கும் இடையே பல்வேறு குழப்பங்களும், தவறுகளும் காணப்படுகின்றன. 

எனவே, இதை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிடுவதாகக் கூறி, உதவி அடிப்படை ஆசிரியா் நியமனத்துக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து யுபிஇஆா்ஏ சாா்பில் அலகாபாத் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.கே.ஜெய்ஸ்வால், டி.கே.சிங் ஆகியோரைக் கொண்ட இரு நீதிபதிகள் அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, யுபிஇஆா்ஏ சாா்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா் ராகவேந்திரா சிங், ‘ஆசிரியா் நியமனத் தோ்வில் தோல்வியடைந்த 31 பேரின் மனுவை விசாரிக்கவோ அல்லது யுபிஇஆா்ஏ போன்ற நிபுணா் குழுவின் தோ்வு முடிவுகளை ஒதுக்கிவிடவோ நீதிமன்றத்து அதிகாரமில்லை.

மேலும், ஆசிரியா் பணி நியமனத்துக்கான கலந்தாய்வு கடந்த 3-ஆம் தேதியே தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. எனவே, இந்த நியமனத்துக்கு தனி நீதிபதி விதித்த இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்’ என்று வாதிட்டாா்.

இதைக் கேட்ட இரு நீதிபதிகள் அமா்வு, ‘தனி நீதிபதியின் ஜூன் 3-ஆம் தேதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. 

மேலும், ஆசிரியா் நியமன நடைமுறைகளை தடையின்றி தொடர அனுமதித்த நீதிபதிகள், ‘சிக்ஷ மித்ராஸ்’ பிரிவினருக்காக 37 ஆயிரம் பணியிடங்களை இருப்பு வைக்குமாறு உச்சநீதிமன்றம் கடந்த 9-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

No comments:

Post a Comment