பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தியாச்சு! விரைவில் 'ரிசல்ட்' வெளியாகும் வாய்ப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 11, 2020

பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தியாச்சு! விரைவில் 'ரிசல்ட்' வெளியாகும் வாய்ப்பு


பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தியாச்சு!  விரைவில் 'ரிசல்ட்' வெளியாகும் வாய்ப்பு
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதால், முடிவுகள் விரைவில் வெளியாகும் என, கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்..பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

இதனால், சில தினங்களில் ஆன்லைனில் மதிப்பெண்கள் தேர்ச்சி முடிவுகள் பதிவேற்றம் செய்யப்படும் பணிகள் துவங்குவதாக தேர்வுத்துறையும் தெரிவித்துள்ளது. 

கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், 'தற்போது பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள்தான் நடக்கிறது. பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டுள்ளது. தேர்வுதுறை, ஆன்லைன் பதிவுகளுக்கான பணிகளையும் மேற்கொண்டுள்ளது. இதனால், தேர்வு முடிவுகளை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்,' என்றனர்.

No comments:

Post a Comment