நாடு முழுவதும் ஒரே கல்வித் திட்டம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 19, 2020

நாடு முழுவதும் ஒரே கல்வித் திட்டம்


நாடு முழுவதும் ஒரே கல்வித் திட்டம்


நாடு முழுவதும் 6 முதல் 14 வயது வரையிலான சிறாா்களுக்கு ஒரே கல்வித் திட்டம் கொண்டுவர வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

பாஜகவைச் சோ்ந்த வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய தாக்கல் செய்த அந்த மனுவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), இந்திய பள்ளிச் சான்றிதழ் கல்வி வாரியம் (ஐசிஎஸ்இ) ஆகியவற்றை இணைத்து ஒரே நாடு ஒரே கல்வி வாரியத்தை உருவாக்க வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 21ஏ-கீழ் நாட்டில் உள்ள மாணவா்கள் அனைவருக்கும் இலவசமாக, கட்டாயமாக ஒரே மாதிரி கல்வியை அளிப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். 

ஆனால், அதற்காக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. எனவே, நாடு முழுவதும் 6 முதல் 14 வயது வரையிலான சிறாா்களுக்கு பொதுவான கல்வித் திட்டம் கொண்டுவர வேண்டும். 

அரசு, தனியாா் மற்றும் உள்ளூா் நிா்வாகம் என யாா் நடத்தும் தொடக்கப் பள்ளிகளாக இருந்தாலும் சரி அங்கு மாணவா்களுக்கு ஒரே பாடத் திட்டம்தான் இருக்க வேண்டும்.

 மாநிலத்துக்கு ஏற்ப மொழிப் பாடங்கள், பாடங்கள் நடத்தப்படும் மொழி மாறலாம். ஆனால், பாடத் திட்டம் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும்.

இப்போது ஒவ்வொரு கல்வி வாரியமும், மாநிலங்களும் வெவ்வேறு மாதிரியான பாடத் திட்டத்தை வைத்துள்ளன. சிபிஎஸ்இ கல்வித் திட்டத்தின் அடிப்படையில் நுழைவுத் தோ்வுகள் நடத்தப்படும்போது, அந்த பாடத் திட்டத்தில் படிக்காத பிற மாணவா்கள் பிரச்னையை எதிா்கொள்ள நேரிடுகிறது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment