அறிவியல் கருத்து வரைபடம் தயாரிக்கும் போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 2, 2020

அறிவியல் கருத்து வரைபடம் தயாரிக்கும் போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு

அறிவியல் கருத்து வரைபடம் தயாரிக்கும் போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு


பள்ளி மாணவர்களின் அறிவியல் குறித்த படைப்பாற்றல் திறனை மேம்படுத்த, விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தின் சார்பில் கருத்து வரைபடம் தயாரிக்கும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது

.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றது

.'கொரோனா' ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் அறிவியல் படைப்புகளை வெளிப்படுத்த, அறிவியல் வீடியோக்களை பதிவிடும் போட்டியை அறிவித்தனர்.


சிறந்த படைப்புகளுக்கு இ-சான்றிதழ்கள், பரிசுகள், மற்றும் அறிவியல் நிபுணர்களால் சிறப்பு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மாணவர்களும் ஆர்வத்தோடு, வீடியோக்களை, அதற்கான இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.


இதைத்தொடர்ந்து, தற்போது, அறிவியல் தொடர்பான கருத்து வரைபடம் வரையும் போட்டியை அறிவித்துள்ளது. இந்த போட்டி, 6 முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், ஒன்பது முதல் பிளஸ் 1 வரை ஒரு பிரிவாகவும் நடத்தப்படுகிறது. 


vvm.org.in
 என்ற இணையதளத்தில், இரண்டு பிரிவினருக்கும் தனித்தனியாக வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளன. அவற்றை பதிவிறக்கம் செய்து, முழுமையாக பார்த்துவிட்டு, கருத்து வரைபடமாக தயாரித்து, அனுப்ப வேண்டும்.


இந்த வீடியோக்களில் உள்ள முக்கியமான கருத்துகளை குறிப்பெடுத்து, அதை கருத்து வரைபடமாக, அதிகபட்சம், 'ஏ3' அளவுக்கு தயாரித்து அதே இணையதளத்தில் பதிவிட வேண்டும்.சிறப்பான கருத்து வரைபடம் தயாரித்து அனுப்பும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.


 வரைபடங்களை பதிவு செய்ய ஜூன் 15ம் தேதி வரை கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்கள் பெற, விஞ்ஞான் மந்தன் மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரானை, 8778201926 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment