கூகுளில் தேடும் தகவல்கள் இனி இத்தனை மாதங்களில் தாமாகவே அழிந்துவிடும்.! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 27, 2020

கூகுளில் தேடும் தகவல்கள் இனி இத்தனை மாதங்களில் தாமாகவே அழிந்துவிடும்.!

கூகுளில் தேடும் தகவல்கள் இனி இத்தனை மாதங்களில் தாமாகவே அழிந்துவிடும்.!
]
கூகுள் நிறுவனம், தனது பயனர்களுக்கு தேடுதல் தகவல்கள் (Search history) மற்றும் யூடியூப்-ல் தேடும் தகவல்கள், லொகேஷன் ட்ரெக்கிங் மற்றும் வலைதள தேடுதல் தகவல் ஆகியவற்றை 18 மாதங்களுக்குப் பிறகு அழிந்துவிடும் என தெரிவித்தது.

உலகில் எவ்வளவு தேடுதல் வலைத்தளங்கள் இருந்தாலும், பயனாளர்கள் விரும்பி பயன்படுத்திவது, கூகுள் தேடுதளமே ஆகும். ஏனேனில் கூகுள், தனது பயனார்குளுக்கு முழு பாதுகாப்பை தருகிறது. இதன்காரணமாக, பெரும்பாலான மக்கள் கூகுளை தேர்வு செய்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களில், நுகர்வோர்கள் மற்றும் US மாநில அட்டர்னி ஜெனரலின் பல வழக்குகள் கூகுள் டேட்டா சேகரிப்பு அடிப்படையில், பல மோசடி செய்ததாக குற்றம் சாற்றியுள்ளனர். 

அதுமட்டுமின்றி, கடந்த இரண்டு ஆண்டுகளில் கலிபோர்னியா மற்றும் ஐரோப்பா நாட்டில் பல இணைய நிறுவனங்கள், தங்களின் தனியுரிமை நடைமுறைகளை சரிசெய்யத் தூண்டின.

இதன் காரணமாக, கூகுள் நிறுவனம் தனது பயனாளர்களின் தேடுதலை 18 மாதங்களுக்கு பிறகு தாமாகவே நிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், அதனை நீக்குவதற்கான வசதியை நீங்களே தேர்வு செய்யலாம் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுளின் இந்த புதுப்பிக்கப்பட்ட அமைப்புகளுக்கு கீழ், தங்களது புதிய பயனர்களின் யூடியூப்-ல் தேடும் தகவல்கள், 36 மாதங்களுக்குப் பிறகு அழிந்துவிடும். மேலும் லொகேஷன் ட்ரெக்கிங் மற்றும் வலைதள தேடுதல் தகவல்கள், 18 மாதங்களுக்குப் பிறகு அழிந்துவிடும் என தெரிவித்தது.

அதுமட்டுமின்றி, இன்காக்நைட்டோ (incognito tab) மூலம் தேடுனால் அந்த தகவல்களை கூகுள் வைத்திருக்காது எனவும் தெரிவித்தது

No comments:

Post a Comment