வெற்றிலையின் முக்கிய நன்மைகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 27, 2020

வெற்றிலையின் முக்கிய நன்மைகள்

வெற்றிலையின் முக்கிய நன்மைகள்
குழந்தைகளுக்கு சிறிய வயதிலிருந்து வெற்றிலையுடன் தூதுவளையை சேர்த்து கொடுத்து வந்தால் சளி இருமல் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் தீரும் இந்நிலையில் வெற்றிலை சாப்பிடுவதால் ஏற்படும் முக்கியமான நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

 நன்மைகள்: உடலில் வாதம் தன்மை அதிகரிக்கும் போது வயிற்றில் வாயுத்தொல்லை போன்றவை ஏற்படுகிறது. மேலும் இதனால் சிறு குழந்தைகள் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு, அவர்களை மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள் . 

இந்த சமயத்தில் வெற்றிலைகளை எடுத்து கொண்டு, அதில் விளக்கெண்ணெய் தடவி நெருப்பில் காட்டி வயிற்றின் மீது வைத்து எடுக்க வேண்டும். இது போல் பத்து நிமிடங்கள் வரை செய்தால் வயிற்றில் இருக்கும் வாயு நீங்கும்

. வெற்றிலையை குளிர்காலத்தில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது, ஏனென்றால் குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு சளி பிடிக்கும், 

இதனால் வெற்றிலையை எடுத்துக்கொண்டால்  சிறந்த நிவாரணம், நுரையீரலில் சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்படும் காலங்களில் ஒன்றிரண்டு வெற்றிலைகள் எடுத்து, அதில் கடுகு எண்ணெய் தடவி நெருப்பில் காட்டி உங்கள் நெஞ்சில் சிறிது நேரம் வைத்து எடுத்து வர சுவாசிப்பதில் இருக்கின்ற சிரமங்கள் நீங்கி நன்கு சுவாசிக்க முடியும்

. குளிர்காலங்களில் சிலருக்கு காரணமாக காதுகளில் வலி ஏற்படும். குறிப்பாக குழந்தைகளுக்கு காதுகளில் வலி மற்றும் குடைச்சல் உணர்வுகள் ஏற்படும். 

இச்சமயங்களில் சிறுது வெற்றிலைகளை கொண்டு வந்து நன்றாக அரைத்து அதன் சாறுகளை இரண்டு காதுகளிலும் இடுவதால் காது வலி குறையும், காது குடைச்சல்கள் நீங்கி காதுகளில் இருக்கின்ற கிருமிகளையும் அழிக்கும்.  

No comments:

Post a Comment