கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்திய இந்த மாநில அரசுக்கு ஐ.நா.சபை பாராட்டு
ஐக்கிய நாடுகள் சபை சார்பாக ஆண்டுதோறும் ஜூன் 24-ம் தேதி பொதுச் சேவை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு வீடியோ கான்ப்ரன்ஸ் முறையில் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் சபை சார்பாக ஆண்டுதோறும் ஜூன் 24-ம் தேதி பொதுச் சேவை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு வீடியோ கான்ப்ரன்ஸ் முறையில் நடைபெற்றது.
அப்போது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி, உயிரிழப்பையும், பாதிப்பையும் குறைத்த கேரள அரசுக்கு ஐ.நா.சபை பாராட்டு தெரிவித்தது.
இந்த கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டானியோ கட்டர்ஸ், ஐ.நா. தலைவர் திஜானி முகமது பன்டே, கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் சின் யங், உலக சுகாதார அமைப்பன் தலைவர் மருத்துவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ், எத்தியோப்பியா அதிபர் ஷாலே வொர்க் ஜூடே மற்றும் ஐநா மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும் இந்தியாவில் இருந்து கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா மட்டும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார்.
இதனையடுத்து வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா நிஃபா வைரஸை எதிர்கொண்ட அனுபவமும், 2018, 2019-ம் ஆண்டுகளில் வந்த வெள்ளத்தில் சுகாதாரத்துறை பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.
இதனையடுத்து வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா நிஃபா வைரஸை எதிர்கொண்ட அனுபவமும், 2018, 2019-ம் ஆண்டுகளில் வந்த வெள்ளத்தில் சுகாதாரத்துறை பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.
இந்த அனுபவங்கள் கொரோனா பாதிப்பை தடுக்க உதவியாக இருந்தது என அவர் தெரிவித்தார். அதனையடுத்து சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதுமே, கேரளா அரசு உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்களையும், வழிகாட்டுதல்களையும், சர்வதேச நடைமுறைகளையும் தீவிரமாக பின்பற்றியது.
இதனால் தான் கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment