வைகாசி விசாகத்தில் இவ்வளவு சிறப்புகள் இருக்கா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 3, 2020

வைகாசி விசாகத்தில் இவ்வளவு சிறப்புகள் இருக்கா?

வைகாசி விசாகத்தில் இவ்வளவு சிறப்புகள் இருக்கா?

வைகாசி விசாகத்தில் இவ்வளவு சிறப்புகள் இருக்கா?

வைகாசியானது தமிழ் வருடத்தின் இரண்டாவது மாதமாகும். இளவேனிற் எனப்படும் வசந்த காலத்தில் இம்மாதம் வருவதால் கோவில்களில் பிரம்மோற்சவங்கள், வசந்த விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றுள் மிகவும் சிறப்பானது வைகாசி விசாகமாகும்.

வைகாசி விசாகத்தின் சிறப்புகள் :

வைகாசி விசாகம் முருகனின் அவதார நாளாகக் கொண்டாடப்படுகிறது.



எமதர்மராஜனின் அவதார தினமாகவும் வைகாசி விசாகம் கருதப்படுகிறது. எனவே, வைகாசி விசாகத்தன்று விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்வதால் நோய் நீங்கி, நீடித்த ஆயுள் கிடைக்கும்.


திருமழப்பாடி என்னும் ஊரில் சிவபெருமான் மழு ஏந்தி திருநடனம் புரிந்ததும், வடலூரில் இராமலிங்க அடிகளார் சத்யஞான சபையை நிறுவியதும் இந்நாளில்தான்.


மகாபாரதத்தின் வில் வீரனான அர்ச்சுனன் பாசுபதா ஆயுதத்தை சிவபெருமானிடமிருந்து பெற்ற நாள் வைகாசி விசாகமாகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த தினமும் இந்நாளே.


சோழ சக்கரவர்த்தியான இராஜராஜ சோழனின் சரித்திரத்தை நாடகமாக ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருநாளில் நடத்திய நாடகக் கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கிட ஆணையை இராஜேந்திரச் சோழன் பிறப்பித்து இருந்ததாக தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டு செய்தி ஒன்று குறிப்பிடுகிறது.

பெரும்பான்மையான கோவில்களில் மகா உற்சவம் நடத்தப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று பிறப்பவர்கள் அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கருதப்படுகிறது.


வால்மீகி இராமாயணத்தில், விஸ்வாமித்திரர் இராம-லட்சுமணர்களுக்கு குமரனின் பிறப்பு மற்றும் பெருமைகளைக் கூறுவார். மேலும், இதனை கூறுபவர் மற்றும் கேட்பவர்களுக்கு பாவங்கள் நீங்குவதாக சொல்லுவர்.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த வைகாசி விசாகத்தில் நாமும் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வை வசந்தமாக்கி கொள்வோம்.


வைகாசி விசாக வழிபாட்டு முறை :

வைகாசி விசாக நாளில் அதிகாலை எழுந்து நீராடி முருகா எனக்கூறி விபூதி அணிந்து கொண்டு முருகன் படத்தின் முன்நின்று முதலில் விநாயகர் அகவல் பாடி கணபதியை வழிபட வேண்டும்.


பின் முருகனுக்குரிய ஸ்லோகங்கள், கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமணிய ஷாடச நாமாக்கள் கூறி அர்ச்சித்து தூபதீபம் காட்டி நைவேத்யம் செய்து வழிபட்டால் முருகனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.


வைகாசி விசாகத்தன்று கோவிலுக்குச் சென்று வழிபட்டால் வீட்டில் உள்ள குழந்தைகள் அறிவில் சிறந்து விளங்குவார்கள். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.

No comments:

Post a Comment