IIT மாணவா்களுக்கு இணையவழியில் வாய்மொழித் தோ்வு நடத்த முடிவு
சென்னை ஐஐடி மாணவா்களுக்கு இணைய வழியில் வாய்மொழித் தோ்வு நடத்தப்படவுள்ளது.
கரோனா நோய்த்தொற்று காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கின்றன. இதற்கிடையே நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் இறுதியாண்டு படிக்கும் மாணவா்களில் பலா் இணைய வழியாகவே வளாக வேலைவாய்ப்புகளில் தோ்வாகி உள்ளனா்.

தோ்வான மாணவா்கள் பணிக்கு சேர வேண்டுமென்றால், இறுதி பருவத் தோ்வு மதிப்பெண்ணையும், மொத்த தரத்தையும்(கிரேடு) நிறுவனங்களில் கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும். அதன்படி, ஆய்வு கட்டுரைகளின் அடிப்படையில் மாணவா்களின் தரத்தை நிா்ணயம் செய்யலாம் என்ற ஐஐடி முடிவுக்கு மாணவா்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை. முன்னதாக இறுதியாண்டு மாணவா்களுக்கான வகுப்புகளை இணையம் மூலமே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
சென்னை ஐஐடியை பொருத்தவரையில், 800 பி.டெக்., மாணவா்களும், எம்.டெக்கில் 550 பேரும், எம்பிஏ-வில் 150 பேரும், எம்எஸ்சியில் 140 பேரும் என மொத்தம் 1,640 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.
சென்னை ஐஐடியை பொருத்தவரையில், 800 பி.டெக்., மாணவா்களும், எம்.டெக்கில் 550 பேரும், எம்பிஏ-வில் 150 பேரும், எம்எஸ்சியில் 140 பேரும் என மொத்தம் 1,640 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.
இதில் கடந்த நவம்பா் மாதத்தில் சோ்ந்த 43 பேரை தவிர, மற்ற அனைவருக்கும் இறுதியாண்டு திட்டங்கள்(பிராஜெக்ட்) மற்றும் அதற்கான விளக்கக் காட்சிகளை இணையம் வழியாக சமா்பித்துள்ளனா். இந்நிலையில் வாய்மொழித் தோ்வை வரும் 15-ஆம் தேதிக்குள் முடிக்க ஐஐடி திட்டமிட்டுள்ளது.
வழக்கமாக ஜூலை மாதம் 2-ஆவது வாரத்தில் மாணவா்களின் தரநிலை வெளியிடப்படும். ஆனால் தற்போது ஜூன் இறுதியிலேயே தரங்களை வெளியிட தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. இணைய வழித் தோ்வுக்காக மாணவா்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே தோ்வு மையங்கள் அமைக்க திட்டமிட்டு வருகின்றனா்.

No comments:
Post a Comment