தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பம் தொடக்கம்: தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, June 25, 2020

தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பம் தொடக்கம்: தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பம் தொடக்கம்: தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்


மத்திய அரசு நாட்டிற்கு பெருமை தேடித்தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள்,
பயிற்றுனர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறது.

2019 க்கு டென்சிங் நர்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான படிவம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்


www.sdat.tn.gov.in

என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கலெக்டர் பரிந்துரையுடன் ஜூன் 30ம் தேதிக்குள் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

தகுதி வாய்ந்தோர் விண்ணப்பம் பூர்த்தி செய்து மாவட்ட விளையாட்டு அலுவலரிடமும் ஜூன் 27 க்குள் (நாளை) வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment