செய்தித்தாள்களின் உதவியுடன் ரயிலை வடிவமைத்து புதிய சாதனை படைத்த மாணவருக்கு இந்திய இரயில்வே அமைச்சகம் பாராட்டு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, June 25, 2020

செய்தித்தாள்களின் உதவியுடன் ரயிலை வடிவமைத்து புதிய சாதனை படைத்த மாணவருக்கு இந்திய இரயில்வே அமைச்சகம் பாராட்டு

செய்தித்தாள்களின் உதவியுடன் ரயிலை வடிவமைத்து  புதிய சாதனை படைத்த மாணவருக்கு இந்திய இரயில்வே அமைச்சகம் பாராட்டு


அத்வைத் கிருஷ்ணா என்ற 12 வயது சிறுவன் செய்தித்தாள்களின் உதவியுடன் ரயிலை வடிவமைத்து ஒரு புதிய சாதனையை புரிந்துள்ளான்.

கேரளாவின் திரிசூர் பகுதியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு பயிலும் இச்சிறுவன் ஊரடங்கில் தனது கலைத்திறமையை வெளிக்கொண்டு வந்துள்ளான்.

 33 செய்தித்தாள்களை சுருட்டி ரயிலை வடிவமைத்து 10 ஏ~போர் ஷீட்கள்கொண்டு டிராக், உதிரி பாகங்களை வடிவமைத்து பல நுட்பங்களுடன் புகைபோக்கி ரயிலை உருவாக்கியுள்ளான்.


இதை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 மிகவும் நேர்த்தியாக உள்ள இந்தப் படைப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கடந்த ஜூன் 25ஆம் தேதி பதிவிடப்பட்ட அந்த டிவீட், 32 ஆயிரத்து 400 பார்வையாளர்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இளம் கலைஞன் மென்மேலும் பல கலைப் படைப்புகளை உருவாக்கி பாராட்டுகள் பெற ஊக்குவிக்கப்பட்டு வருகிறான். இந்த ரயிலை செய்துமுடிக்க அவனுக்கு மூன்று நாட்கள் தேவைப்பட்டது.அவனது திறமைக்கும் பொறுமைக்கும் கிடைத்த பரிசாக இந்த பாராட்டு அமைந்துள்ளது. கிருஷ்ணாவின் இந்த முயற்சியை இந்திய ரயில்வே அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவனைப் பாராட்டியுள்ளது.

No comments:

Post a Comment