புதிய கல்வி கொள்கை அமலுக்கு வர உள்ளதால் பாட புத்தகங்களில் மாற்றம் செய்வதற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 25, 2020

புதிய கல்வி கொள்கை அமலுக்கு வர உள்ளதால் பாட புத்தகங்களில் மாற்றம் செய்வதற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவு

புதிய கல்வி கொள்கை அமலுக்கு வர உள்ளதால் பாட புத்தகங்களில் மாற்றம் செய்வதற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவு
புதிய கல்வி கொள்கை அமலுக்கு வர உள்ளதால், சி.பி.எஸ்.இ., பாட புத்தகங்களில் மாற்றம் செய்வதற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய ~ மாநில அரசுகளின் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.


இந்நிலையில், இந்த கல்வி ஆண்டில், புதிய கல்வி கொள்கை அமலாக உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதிய கல்வி கொள்கையின்படி, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் சார்பில், புத்தகங்களில் திருத்தம் செய்ய, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


புத்தகங்கள் திருத்தப்பட்டால், என்.சி.இ.ஆர்.டி.,யின் புத்தகங்களை பின்பற்றும், சி.பி.எஸ்.இ., பாட புத்தகங்களில் மாற்றம் ஏற்படும் என, கல்வியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment