வாட்ஸ்அப்பில் பணம் செலுத்தும் முறை.! - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, June 27, 2020

வாட்ஸ்அப்பில் பணம் செலுத்தும் முறை.!

வாட்ஸ்அப்பில் பணம் செலுத்தும் முறை.!
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்அப்பில் பணம் செலுத்தும் முறை சேவையை பிரேசிலில் நிறுத்திய பின்னர் தற்போது இந்தியாவில் தொடங்க முடிவு செய்துள்ளது.

பணத்தை மற்றவருக்கு அனுப்புவதற்கு நிறய வழிமுறைகள் இருந்தாலும், பொதுவாக பொது மக்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்துவது கூகுள் பே தான். இந்நிலையில் கூகுள் பேக்கு போட்டியாக தற்போது வாட்ஸ்ஆப்பில்  பண பரிவர்த்தனை வந்துவிட்டது. தற்போது புதிய அப்டேட்டாக பண பரிவர்த்தனை செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது இந்த புதிய அப்டேட் பிரேசில் நாட்டில் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் எல்லா நாடுகளுக்கும்  இந்த வசதி வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பிரேசிலில் உள்ள மத்திய வங்கியுடனும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவதால் இந்தியாவில் வாட்ஸ்அப் பணப்பரிமாற்றம் கொண்டுவர முடிவு செய்துள்ளளோம் என வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

செயல் மற்றும் தனியுரிமை ஆகிய துறைகளில் பிரேசிலின் பணப்பரிமாற்றம் முறைக்கு சேதம் ஏற்படவுள்ளதால்  பிரேசிலின் மத்திய வங்கி கடந்த வாரம் அந்நாட்டில் தொடங்கப்பட்ட பணப்பரிமாற்றத்தை நிறுத்தியதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

 இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தி வருகிறார்கள். இதில் ஒரு மில்லியன் பயனர்களுடன் ஒரு சோதனையின் ஒரு பகுதியாக பிப்ரவரி 2018 இல் யுபிஐ அமைப்பை அடிப்படையாகக் கொண்ட வாட்ஸ்அப் பணப்பரிமாற்றத்தை  அறிமுகப்படுத்தியது.

No comments:

Post a Comment