காமராஜர் பல்கலையில் முதன்முறையாக இணையவழி பன்னாட்டு கருத்தரங்கம்
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறை, உல கத் தமிழராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து உலக நாடுகளில் தமிழ் மொழியின் வளர்ச்சி என்ற தலைப்பில் 10 நாள் பன்னாட்டு இணைய வழிக் கருத்தரங்கை முதன்முறையாக நடத்தின.
துணைவேந்தர் எம்.கிருஷ் ணன் தொடங்கி வைத்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் விசயராகவன் தொடக்க உரையாற்றினார். தங்கள் நாடுகளில் தமிழ் வளர்ச்சி குறித்து மலேசியப் பல்கலை. பேராசிரியர் குமரன், இலங்கை தமிழ் பேராசிரியர் ஜெயசீலன், ஆஸ்திரேலியா மெல்போர்ன்
தமிழ் மொழி கல்வி முன்னாள் இயக்குநர் ஜெயராம சர்மா, கனடா வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரி அதிபர் கோதை அமுதன், பிரான்ஸ் பன்னாட்டு உயர் கல்வி நிறுவன இயக்குநர் சச்சிதானந்தம், சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சீதாலட்சுமி மற்றும் பிரிட்டன், கம்போடியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனியைச் சேர்ந்த பேராசிரியர்கள் பேசினர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் என 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஒவ்வொரு நாளும் 1,400-க்கும் மேற்பட்டோர் இணைய வழியில் கருத்தரங்கை கேட்டனர். இதன் நிறைவு விழா நேற்று (ஜூன் 11) நடந்தது.
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சத்தியமூர்த்தி வரவேற்றார். பதிவாளர் நடேசன் சங்கர் நிறைவுரையாற்றினார்.
ஜெர்மன் ஜொ சன்னஸ் குட்டன் பெர்க் பல்கலை மருத் துவத் துறை துணை பேராசிரியர் கீதாஞ்சலி பிர்கோட் உட்பட பல்வேறு நாடுகளின் பேராசிரி யர்களும் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை பேரா சிரியர் சத்தியமூர்த்தி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் விசயராகவன் செய்திருந்தனர்.

No comments:
Post a Comment