மதிப்பெண் கணக்கிடும் பணி: விடைத்தாள் சேகரிப்பு துவக்கம் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, June 23, 2020

மதிப்பெண் கணக்கிடும் பணி: விடைத்தாள் சேகரிப்பு துவக்கம்

மதிப்பெண் கணக்கிடும் பணி: விடைத்தாள் சேகரிப்பு துவக்கம்
எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண்கள் கணக்கிடுவதற்காக காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை நாமக்கல், திருச்செங்கோடு கல்வி மாவட்ட தலைமை ஆசிரியர்களிடம் பெறும் பணி நேற்று துவங்கியது.


கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு காரணமாக எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு நிறுத்தப்பட்டது. அனைத்து மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களின் அடிப்படையில் பொதுத் தேர்வு மதிப்பெண்ணை, 80 சதவீதமாக கணக்கிடவும், வருகைப் பதிவேட்டை, 20 சதவீதம் கணக்கிடவும் அறிவுறுத்தப்பட்டது. 

இதற்கான விடைத்தாள்கள் பெறும் பணி நேற்று துவங்கி, வரும், 27 வரை நடைபெறுகிறது. அதன்படி, நாமக்கல் கல்வி மாவட்டத்தில், டிரினிடி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமாரும், திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் வித்யா விகாஸ் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர்கள் ரவி ஆகியோரும் பெறுகின்றனர்.

மாவட்டத்தில் மொத்தம், 303 அரசு, தனியார் உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. 20 ஆயிரத்து, 303 மாணவ, மாணவியருக்கு மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. இதற்காக விடைத்தாள்கள், மதிப்பெண் அட்டை, பதிவேடு ஆகியவை பெறப்பட்டது. தினசரி, 25 பள்ளிகள் வீதம் கணக்கிட்டு பெறப்படுகிறது. 

முன்னதாக, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் பணியில் ஈடுபடும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

No comments:

Post a Comment