ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 5, 2020

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க  உயர் நீதிமன்றம் மறுப்பு

கேரளாவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவது விட்டது.

கரோனா நோய்த்தொற்றின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கேரளாவில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்  மாநில அரசின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது

. இந்த ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க ஸ்மார்ட் போன் இல்லாத நிலையில் மாணவி ஒருவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் கடந்த வாரத்தில் நடந்தது.

இந்நிலையில் கேரளாவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி, கிரிஜா என்பவர் மாநில உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். 

அவர் தனது மனுவில், மாநிலத்தின் உள்ளடங்கிய பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் குறிப்பாக எஸ்.சி / எஸ்.டி சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு இந்த ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெறுவதற்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்படாத நிலையில், இதில் பெரிய பாகுபாடு நிலவுகிறது. 

எனவே கேரளாவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிப்பது குறித்து, மாநில அரசு மற்றும் கேரள கல்விசார்  உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப பிரிவிற்கு ஆலோசனை வழங்குமாறு கோரியிருந்தார்.

இந்த மனுவானது நீதிபதி டயஸ் முன்னிலையில் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது மாநில அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் வகுப்புகள் துவங்குவதற்கு முன்பே மாணவர்களுக்கு அதுதொடர்பான உரிய வசதிகள் செய்து கொடுகபட்டுள்ளது என்றும், ஆன்லைன் வகுப்பிற்கான பாடங்கள் மாணவர்களால் மொத்தமாக எளிதான முறையில் தரவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து தற்போதைய சூழலில் மனுதாரரின் கோரிக்கைப்படி, கேரளாவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிமதி மறுப்புத் தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தார்

No comments:

Post a Comment