கல்னா சாவ்லா விருதுக்கு வீர, தீரப் பெண்கள் விண்ணப்பிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 5, 2020

கல்னா சாவ்லா விருதுக்கு வீர, தீரப் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

கல்னா சாவ்லா விருதுக்கு வீர, தீரப் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான “கல்பனா சாவ்லா விருது” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சர் அவர்களால், சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது.

இந்த விருதில், ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும் மற்றும் ஒரு பதக்கமும் அடங்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர்.

2. 2019-ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன்,

அரசு முதன்மைச் செயலாளர்,
பொதுத் துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை - 600009 என்னும் முகவரிக்கு 30.06.2019-க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

விருதுபெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment