இந்த தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை.:தமிழக அரசு  - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 19, 2020

இந்த தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை.:தமிழக அரசு 

இந்த தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை.:தமிழக அரசு

ஐஐடி ஐதராபாத் நுழைவுத் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச்சீட்டை காட்டினால் மாணவர்களை இ-பாஸ் இன்றி அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹைதராபாத் ஐஐஐடி நுழைவுத் தோ்வு எழுத செல்லும் மாணவா்கள், தோ்வுக் கூட நுழைவுச் சீட்டை காண்பித்து தோ்வு எழுத செல்லலாம் இ- பாஸ் தேவையில்லை என தலைமைச் செயலா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் டிஜிபி, அனைத்து மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையா் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தின் விவரம்: 

ஹைதராபாத் ஐஐஐடியின் நுழைவுத் தோ்வு, ஜூன் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வு, அத்தியாவசிய செயல்பாடாக கருதப்படுகிறது. 

எனவே, இதற்கான அனுமதிச் சீட்டு, பொதுமுடக்கத்தின் போது வழங்கப்படும் இ- பாஸ் மற்றும் வாகன அனுமதிச் சீட்டுக்கு இணையாகக் கருதப்படுவதால், வீட்டில் இருந்து தோ்வுக் கூடத்துக்கு சென்று வர பயன்படுத்திக் கொள்ளலாம். 

மேலும், வருகிற ஜூன் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள ஹைதராபாத் ஐஐஐடி தோ்வு, நல்ல முறையில் நடைபெற தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையா் மேற்கொள்ள வேண்டும் என தலைமைச் செயலா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment