கல்லூரி தேர்வுகளும் ரத்தாகிறதா?
கல்லூரிகளுக்கான தேர்வுகள் நடத்துவது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியது:
தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் போன்றவை பல இடங்களில் கரோனா சிகிச்சை மையங்களாக செயல்படுகின்றன.
இந்த சூழலில் கல்லூரி தேர்வுகளை நடத்த இயலாது. கரோனா தொற்று பாதிப்பு குறைந்த பிறகு தான் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க முடியும். அதேநேரம், மாணவர் களின் எதிர்காலத்துக்கு தேர்வு முடிவுகள் மிகவும் முக்கியமானது.
தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாகவும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். தமிழக அரசே கல்லூரி தேர்வுகள் குறித்து முடிவுகளை இறுதி செய்யும். இவ்வாறு கூறினார்.

No comments:
Post a Comment