மருத்துவ மேற்படிப்பில் OBC பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 12, 2020

மருத்துவ மேற்படிப்பில் OBC பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு


மருத்துவ மேற்படிப்பில் OBC பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு

மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குவதற்கு அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மருத்துவ மேற்படிப்பு களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆணையிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையல்ல என்று தீர்ப்பளித்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநில அரசுகள் வழங்கும் இடங்களில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், உயர்வகுப்பு ஏழைகள் ஆகியோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

 ஆனால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் 27 சதவீத இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இது ஒரு பிரிவுக்கு மட்டும் காட்டப்படும் பாகுபாடாகும்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால், சமூகநீதிக்கு பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அச்சேதம் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கான சட்டத்தை நிறைவேற்றக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்பதால் தற்காலிக ஏற்பாடாக அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment